Saturday, December 1, 2012

மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு

வணக்கம் நண்பர்களே,

இதற்க்கு முந்தைய பதிவில், மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய ஒரு அறிமுகத்தை பார்த்தோம். இந்த பதிவில்  மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி,  அதனால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.


தங்கம்:

இன்றைய தினத்தில் தங்கம் என்பது நமது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு இன்றிமையாத இடத்தை பிடித்து விட்டது. தங்கத்தை ஆபரணமாக மட்டுமே பார்த்த காலம் மாறி, முதலீடு செய்யும் இடமாகவும் மாறி விட்டது. 



















தங்கம் வாங்கும் வழி :

பொதுவாக நாம் கீழே உள்ள ஏதாவது ஒரு வழியில் தங்கம் வாங்கிடலாம்.
  • நகை கடைகளில் வாங்குவது 
  • வங்கி / தபால் நிலையங்களில்  வாங்குவது
  • இ -கோல்ட் 

நகை கடைகள் மூலமாக வாங்குவது

நமக்கு தெரிந்த மிக சுலபமான வழி இதுவே. தங்க நகையாக அல்லது தங்க காசுகளாக வாங்கி கொள்ளலாம்.

வங்கி / தபால் நிலையங்களில்  வாங்குவது

இங்கு தங்க காசுகள் மட்டுமே வாங்க முடியும். நகைகள் இங்கே கிடைக்காது மேலும் நமக்கு விற்ற தங்க காசுகளை திரும்ப வாங்கி  கொள்ள மாட்டார்கள்.  

இ -கோல்ட் 

இன்றளவில் இந்தியாவில் பிரபலமாகி கொண்டு வருகின்ற முறை இது. நீங்கள் தங்கம் வாங்க மிக சிறந்த வழிமுறை இது. 

 
முதலில் குறிப்பிட்டு இருந்தது போல தங்கத்தை நாம் நகை கடைகளில் இருந்தே பெரும்பாலும் வாங்குகிறோம். நீங்கள் தங்க நகைகள் (நகைகளாக) வாங்க இதுவே   வழி.

ஆனால் உங்களது நோக்கம் சேமிப்பாகவோ (சிறிது சிறிதாக தங்க காசுகள்  சேர்த்து பின்பு அதைக்கொண்டு நகை  வாங்குவது) அல்லது முதலீடாகவோ (தங்க காசுகள்  வாங்கி பின்பு  விற்று லாபம் பார்ப்பது)  இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக கூறிய இ -கோல்ட் முறையே (மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு) சிறப்பானதாகும்.

மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு செய்வதால் என்ன பயன்கள் ?

1.  மாதம் தோறும் ஒரு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உங்களால் தங்கம் வாங்க முடியும் 

2. உங்களது வங்கி கணக்கிலிருந்து மாதம்தோறும் SIP (Systematic Investment Plan) முறையில் பணம் எடுக்கப்பட்டு, அந்த தொகைக்கான தங்கம் (யூனிட்களாக) உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும்.  

3.  செய்கூலி மற்றும் சேதாரம் ஆகிய செலவுகள் இதில் இல்லை.

4. மிக குறைந்த கட்டணம்  

5.  மிக குறைந்த தொகைக்கு (100/500/1000) மாதம் தோறும் தங்கம் வாங்க கூடிய வசதி

6.  பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. (திருட்டு பயம் கிடையாது)

7.  வங்கி லாக்கர் போன்றவை தேவையில்லை (
லாக்கர் வாடகை தொகை மீதியாகும்) 

8.  எப்பொழுது வேண்டுமானாலும் விற்று பணமாக பெற்று கொள்ள கூடிய வசதி 

9.  தங்கம் விலை குறைந்து உள்ள பொழுது கூடுதல் பணம் செலுத்தி அதிக தங்கம் (குறைந்த விலையில்) வாங்கி வைக்கலாம். 

10.  சொத்து வரி கிடையாது (ஒரு வருடத்திற்கு மேல் விற்கும் பொழுது)

11.  டீமாட் அக்கௌன்ட் தேவையில்லை. 

12.  நீண்ட கால தேவைகள்  / குழந்தைகளின் திருமணம் போன்றவற்றிக்கு இப்பொழுது இருந்தே திட்டமிட்டு மாதம்தோறும் முதலீடு செய்யலாம்.


மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு - சிறு உதாரணம்.

ஒரு சிறிய  உதாரணத்தின்  மூலம் மியூச்சுவல் ஃபண்ட் வழியாக செய்யப்படும் முதலீடு எப்படி சிறந்தது என பார்ப்போம்.

 நீங்கள் 8 கிராம் தங்கத்தை 01-02-2012 அன்று வாங்கி 30-11-2012 அன்று விற்பதாக வைத்து கொள்வோம்.

நகை கடையில்  8 கிராம் தங்கம் வாங்கி, அதே கடையில் விற்பனை செய்தால் Rs. 863.63 லாபம் கிடைக்கும்.

அதே தொகைக்கு மியூச்சுவல் ஃபண்ட் வழியாக  வாங்கி, விற்பனை செய்தால் Rs. 2171.11 லாபம் கிடைக்கும். (வாங்கிய தேதியில் இருந்து ஒரு வருடம் கழித்து விற்பதாக வைத்து கொண்டால் Rs. 2416.57 லாபம் கிடைக்கும்).

விரிவான கணக்கீடு: 




குறிப்பு : இங்கே கணக்கீடு செய்ய SBI Gold Fund இன் NAV பயன்படுத்த பட்டுள்ளது. தங்க காசு வாங்கும் பொழுது கணக்கிடப்படும் சேதாரம் 3% என எடுத்து கொண்டுள்ளோம். இது கடைகளை பொறுத்து மாறுபடலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு - யாருக்கு ஏற்றது ?

மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில்  முதலீடு   செய்வது அனைவருக்குமே ஏற்றது என கூறலாம். 

குறிப்பாக,


  • மாதம்தோறும் ஒரு தொகை தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர்.
  • நீண்ட கால முதலீடாக தங்கம் வாங்க விரும்புவோர்.
  • குழந்தைகளின் திருமணம் போன்ற நிகழ்சிகளுக்கு இப்பொழுது இருந்தே சேமிக்க விரும்புவோர்.

 என அனைவரும் மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில்  முதலீடு  செய்யலாம்.




மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி ?

சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனகளின் தங்க முதலீட்டு திட்டத்தில் பங்கு கொள்ள 9789 44 5 777 என்ற அலைபேசியில் எங்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது snp.personalfinance@gmail.com என்ற முகவரிக்கு உங்களை பற்றிய தகவல்களை அனுப்பவும். 

-- SNP 



No comments:

Post a Comment