Friday, June 29, 2012

முதலீட்டு வகைகள்

வணக்கம் நண்பர்களே,

இதற்க்கு முந்தைய பதிவுகளை படிக்காமல் இருந்திருந்தால், அவற்றை படிக்க.

கேள்வி - பதில்
சேமிப்பு vs முதலீடு

இந்த இரண்டு பதிவுகளின் மூலம் நாம் அறிந்து கொண்டதன் சுருக்கம்:

1. சேமிப்பு என்பதும் முதலீடு என்பதும் ஒன்றல்ல.

2. சேமிப்பு என்பது நமது முதலீட்டிற்க்கான முதல் படி. 



இந்த பதிவில் முதலீட்டு வகைகள் பற்றி பார்ப்போம்.

முதலீடு: 

"நமது செலவை குறைப்பதின் மூலம் அல்லது (அனாவசிய) செலவு செய்யாமல் இருப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்தி (சேமிப்பு) அதனை நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களில்முதலீடுசெய்யும் பொழுது நமது பணம் ஒரு நல்ல ருமானத்தைநமக்கு அளிக்கும்"


முதலீடு செய்வதற்கு முன்பாக நமது முதலீடு எவ்வகையானது என்பதை முடிவு செய்து அதற்க்கு ஏற்றது போன்ற திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். 

முதலீட்டு வகைகளை பொதுவாக இரு பிரிவுகளில் பிரிக்கலாம்.


1. குறைந்த கால முதலீடு (Short Term Investment)
2. நீண்ட கால முதலீடு (Long Term Investment)

குறைந்த கால முதலீடு (Short Term Investment)


குறுகிய காலத்திற்குள் பணம் தேவைப்படும்பொழுது, முதலீடு குறுகிய கால முதலீடாக அமையுமாறு திட்டமிடுதல் வேண்டும்.


குறுகிய கால முதலீட்டின் முக்கிய நோக்கம், நமது முதலீட்டு தொகை எந்த வித பாதிப்பும் இல்லாமல் நமக்கு கிடைக்க வேண்டும்.

சில உதாரணங்கள் :






















குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்றவை:

1. வங்கி முதலீடு
2. தபால் நிலைய முதலீடு 
3. மியுட்சுவல் பண்ட் (கடன் சார்ந்தவை)







நீண்ட கால முதலீடு (Short Term Investment)


நீண்ட நாள் தேவையை மனதில் கொண்டு செய்ய கூடிய முதலீடுகள் இவ்வகையை சேர்ந்தவை.

உங்களுடைய பணம் சிறந்த முதலீடாக மாறி உங்களது எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே இம்முதலீடுகளை நோக்கம்.

முக்கியமாக உங்களது முதலீடு பண வீக்கத்தை தாண்டி செயல்பட கூடியதாக இருக்க வேண்டும்.

சில உதாரணங்கள் :























நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றவை:

1. மியுட்சுவல் பண்ட் (பங்கு சந்தை சார்ந்தவை)
2. ரியல் எஸ்டேட் (நிலம் / வீடு)
3. PPF
4. தங்கம் (கோல்ட்)


இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டியது என்னவென்றால், மியுட்சுவல் பண்ட் முதலீடு என்பது இரண்டு வகைகளுக்கும் பொதுவானதாக உள்ளது.


இனி வரும் பதிவுகளில் மியுட்சுவல் பண்ட் பற்றி மிக விரிவாக பார்க்கலாம்.


மியுட்சுவல் பண்ட் என்றால் என்ன ? 
ஏன் இவற்றில் நாம் முதலீடு செய்ய வேண்டும் ? 
மியுட்சுவல் பண்ட் வகைகள் என்ன ? 
சிறந்த மியுட்சுவல் பண்ட் திட்டங்கள் எவை ? 


இதை போன்ற அனைத்து தகவல்களையும் இனி விரிவாக பார்க்கலாம்.


- SNP 








No comments:

Post a Comment